டெல்லி கார் வெடிப்பு - ஜெய்ஷ் இ முகமது நிதியுதவி

 
அ அ

நாட்டையே உலுக்கிய நவ.10 டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது நிதியுதவி செய்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நாட்டையே உலுக்கிய நவ.10 டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது நிதியுதவி செய்துள்ளது. உமர், முசாமில், ஷாஹினுக்கு ஹவாலா நெட்வொர்க் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது, ரூ.20 லட்சம் நிதி அனுப்பியுள்ளனர். குண்டு தயாரிக்க ரூ.3 லட்சத்திற்கு உமர் அமோனியம் நைட்ரேட் உரம் வாங்கியுள்ளதாகவும்  உளவுத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இந்தியாவில் பாதுகாப்பு படைகள் மட்டுமே பயன்படுத்தும் 9 mm துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3 தோட்டாக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.