டெல்லி கார் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
Nov 10, 2025, 20:57 IST1762788453656
டெல்லி செங்கோட்டை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ மற்றும் ஒரு வேன் தீயில் எரிந்து சேதமானது. கார் குண்டு வெடிப்பை அடுத்து டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசி வாயிலாக செங்கோட்டை வெடி விபத்து சம்பந்தமான விஷயத்தை கேட்டு அறிந்திருக்கிறார்.


