பொதுமக்கள் முன்னிலையில் டெல்லி முதலமைச்சர் மீது கொடூர தாக்குதல்
Aug 20, 2025, 11:50 IST1755670853000
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போது 30 வயது மதிக்கதக்க நபர் முதலமைச்சரை அறைந்து, முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சி.எம். குப்தா மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில், முதல்வர் மீது தாக்குதல் நடத்திய நபர் ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்ரியா என்று தெரியவந்துள்ளது. அவர் ராஜ்கோட்டை சேர்ந்தவர்.


