I.N.D.I.A கூட்டணி என பெயர்...எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

 
delhi hc

I.N.D.I.A கூட்டணி என பெயர் வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அணுப்பியுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த மாதம் (ஜூன்) 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் நடந்தது.  இதனைத்தொடர்ந்து 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்.   இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி என பெயர் வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அணுப்பியுள்ளது. இந்தியா என பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.