காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் - டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு!!
Jun 25, 2024, 08:50 IST1719285641520
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லிக்கு ஹரியானா மாநில அரசு தண்ணீர் திறந்துவிட கோரி, 22ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடுமையான வெப்பம் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.