#Breaking உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சண்டிகரில் இருந்து திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்த திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜிலாஹி ரயில் நிலையத்திற்கும் கோசாய் திஹ்வாவிற்கும் இடையில் தடம் புரண்டது. ரயிலின் 10 முதல் 15 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர், ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
ரயிலில் பயணிக்கவே பயமாக இருக்கிறது
— தூய துறவி (@VSK_Talks) July 18, 2024
கடந்த பத்து ஆண்டுகளாக ரயில்வே துறையை நரேந்திர மோடி நாசம் செய்து வைத்திருக்கிறான் .
ஊழலால் கவிழும் ரயில் பெட்டிகள்.
இன்று உத்திர பிரதேசத்தில் 👇#BJPFails pic.twitter.com/FV1sjEmmgY
விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு, ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.