மத்தியபிரதேசத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

 
dainoser egg

மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள டோனோசர் தேசிய பூங்காவில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய எரிகற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரழிவினால் இந்த இனங்கள் அழிந்து போனதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த சிறிய வகை பறவை இனங்கள் மட்டும் பேரழிவில் இருந்து தப்பியதாக கூற்று உள்ளது. அந்த இனங்கள் பறவைகளுடன் பறவையாக வாழ்ந்து வரக்கூடும் என கருதப்படுகிறது.  . பூமியில் வாழ்ந்த டைனோசர்களில் பாதிக்கும் மேற்பட்டவை நிலத்தில் வாழக்கூடையதாகவும், சில பறவைகள் போல வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் டைனோசர்களின் எச்சங்கள் மற்றும் புதை படிவங்கள் இன்றளவும் கண்டுபிடிக்கப்படுகின்றன. 

dainoser

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை  கண்டறிந்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தின்  தார் மாவட்டத்தில் உள்ள டோனோசர் தேசிய பூங்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.  அப்போது டைட்டானோசர் என்ற வகையான டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து தனித்துவமான சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. டைனோசர் முட்டைகளின் 52 கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த புதிய வகை கண்டுபிடிப்பு மூலம் டைனோசரின் இனப்பெருக்கம், கூடு கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து புதிய வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என ஆராய்ச்சியாள்ர்கள் தெரிவித்துள்ளனர்.