திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!

 
tirupati tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையில்  ஆன்லைனில் வழங்கப்பட்டன. அத்துடன்  ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களும் ஆன்லைனில் அளிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

tirupathi

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் மீண்டும் விநியோகிக்கப்படுகிறது. ஸ்ரீனிவாசன்,  விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் உள்ள கவுன்டர்களில்  டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அதே நாளில் மதியம் 12 மணி முதல்  சுவாமி தரிசனம் செய்ய  அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.