வயிற்றுக்குளே 13 ஹேர்பின் உள்ளிட்ட கூர்மையான பொருட்கள் - சாதுர்யமாக அகற்றிய மருத்துவர்கள்

 
tn

இளைஞரின் வயிற்றுக்குளே இருந்த கூர்மையான பொருட்களை மருத்துவர்கள் சாதுர்யமாக அகற்றினர்.

tn

புதுச்சேரியில் 20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 4 சேஃப்டி பின், 6 பிளேடுகளை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  மனநலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் இவற்றை விழுங்கியுள்ளார். அறுவை சிகிச்சை இல்லாமல், சவாலான இந்த சிகிச்சையை எண்டோஸ்கோபி மூலம் மேற்கொண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

tn

இதுக்குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் நிபுணர்கள் கே.சசிகுமார் மற்றும் கே.சுகுமாரன் மற்றும் மருத்துவ இரைப்பை குடல் மருத்துவர் ஜி.ராஜேஷ் குமார் ஆகியோர்,  கடந்த சில வாரங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார். நோயாளி மனநோய்க்கான மருந்துகளை உட்கொண்டிருந்தார். அல்சருக்கான சோதனைகள் மற்றும் ஸ்கேன் அறிக்கைகள் இயல்பானவை தான். 

அதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழு ஒன்று, வயிற்றில் ஒரு கடினமான பொருளாக மாறிய பல கூர்மையான  பொருட்கள் குவிந்து கிடப்பதைக் கண்டறிந்தனர் . நாங்கள் நோயாளியின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின்கள், ஐந்து சேப்டி பின் மற்றும் ஐந்து பிளேடு ஆகியவற்றை  அகற்றினோம். இதன் பின்னர் நோயாளி குணமான நிலையில் அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றனர்.