அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

 
earth

அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது. 

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிப்பதாகும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.

earth

நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும். பொதுவாக கடலடியில் ஏற்படும் 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் சுனாமியை உருவாவதில்லை. ஆனால் ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே சுனாமியை உருவாவதற்கும் அதனால் ஏற்படும் பெருஞ்சேதங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக 2004 இல் இந்தோனேசியா அருகே நடுக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலக அளவில் இதுவே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சுனாமியாக பார்க்கப்படுகிறது. 

earthquake

அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. பாங்கினுக்கு வடக்கே 215 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.