அருணாச்சல பிரதேசத்தில் இன்று திடீர் நிலநடுக்கம்!
அருணாசல பிரதேசத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சரியாக இன்று காலை 6:56 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு கிழக்கு-தென்கிழக்கே 64 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகினது. அத்துடன் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 4:22 மணிக்கு அடுத்த மூன்று நிமிடங்களில் மூன்றாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதேபோல் மணிப்பூரிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.


