குஜராத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் - ஆய்வாளர் எச்சரித்தது போலவே நடக்கிறதா?

 
Gujarat

இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரித்திருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 3.8 ஆக பதிவானது. 

துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன.  கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 என்கிற அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாலும், 40 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளாலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகியுள்ளன. எங்கு பார்த்தாலும், கட்டிடக் குவியல்கள், மனித உடல்களாக காட்சியளிக்கின்றன.  இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவிலும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

Turkey

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.