லடாக் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம் - மக்கள் பீதி!

 
earthquake

லடாக் மற்றும் மேகாலயாவில் இன்று திடீரென நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். 

லடாக் மற்றும் மேகாலயாவில் இன்று திடீரென நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.  லடாக்கின் கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. 

இதேபோல் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது 12 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.