நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார் இல.கணேசன்

 
Ela ganesan

மணிப்பூரில் இருந்து நாகலாந்துக்கு மாற்றப்பட்ட இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இன்று பதவியேற்றுக்கொண்டார். 

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த12ம் தேதி உத்தரவிட்டார். அதில் தமிழக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதேபோல் மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், கட்சி சார்ந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.  

இந்நிலையில், மணிப்பூரில் இருந்து நாகலாந்துக்கு மாற்றப்பட்ட இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.   நாகலாந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.