பெரும் பரபரப்பு! சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 
sonia gandhi

கர்நாடக தேர்தல் பரப்புரையில் பேசிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சோனியா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட  கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மே -13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட  நிலையில் , தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர்.  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டிகள் நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், ஜனதா தளமும் தீவிர முனைப்புடம்  பரப்புரையில் ஈடுபட்டனர்.

Sonia Gandhi

பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  காங்கிரஸ் தரப்பில்  ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும்  ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தெவகவுடா உள்ளிட்ட தலைவர்களும் , வேட்பாளர்களும்  சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று பேசினார்.  

இந்நிலையில், சோனியாகாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமையிலான பா.ஜனதா குழு, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தது. அதில், சோனியா காந்தியின் இந்த பேச்சு பிரிவினைக்கு அழைப்பு விடுவதாக அர்த்தம். அத்தகைய அழைப்பு, ஆபத்தான, மிகக்கொடிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதற்காக, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் பா.ஜனதாவின் புகார் தொடர்பாக சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.