குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது - இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை

 
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா


குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் (ஜூலை 21) மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.  74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது  பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது.  ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது , அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Image

இருப்பினும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.  தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   ஓரிரு நாட்களில்  குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 788 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு அடுத்த  மாதம் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.