'எக்ஸ்' தளத்தில் புதிதாக இணையும் பயனர்களுக்கு கட்டணம் - அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்

 
tn tn

X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு டிவிட்டரை விலைக்கு வாங்கினார்.  கடந்த அக்டோபரில் சுமார் 44 பில்லியன் டாலருக்கு  டிவிட்டரை வாங்கிய அவர்,  எக்ஸ் தளம் என பெயர் மாற்றம் செய்து லோகோவையும் மாற்றினார் .  பல்வேறு அதிரடி  மாற்றங்களை கொண்டுவரும் அவர்,  நீல நிற குறியீட்டுக்கு பணம், டிவிட்டர் கணக்கில் எடிட் ஆப்ஷன் பெறுவதற்கு பணம் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். 

tn

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிடவும்,  மற்றவர்களின் பதிவுகளுக்கு  லைக் மற்றும் புக்மார்க் செய்ய கட்டணம் வசூலிக்கவுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். நியூசிலாந்து, பிலிப்பைன்ஸில் இந்த கட்டண வசூல் நடைமுறையில் உள்ள நிலையில் விரைவில் உலகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். போலிக் கணக்குகளைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.