செல்போனை பிடிங்கிய பேராசிரியரை செருப்பால் அடித்த மாணவி
ஆந்திராவில் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்த மாணவியிடம் பிடிங்கி வைத்து கொண்ட பேராசிரியரிடம், மாணவி செல்போன் கேட்டு தராததால், அவரை செருப்பால் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்த மாணவியை கண்டித்து செல்போனை ஆசிரியர் பிடிங்கி தன்னிடம் வைத்து கொண்டார். இதனால் கோபமடைந்த மாணவி செல்போனை திருப்பி தர சொல்லி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாணவி - ஆசிரியர் இருவரும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போதுஅந்த மாணவி, அந்த போனோட விலை ரூ.12,000... நீ எப்படி என் போன் எடுப்பாய்? என ஆசிரியையைஇ ஆபாச வார்த்தைகளால் திட்டி செருப்பால் அடித்தார். மாணவியை அங்கிருந்த ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை வீடியோ பதிவு செய்த சிலர் சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது வைரலாகி உள்ளது.


