டெல்லியில் ரெட் அலர்ட்! குண்டுவெடிப்பால் உயரும் பலி எண்ணிக்கை
டெல்லி செங்கோட்டை அருகே இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்தது.

டெல்லி செங்கோட்டை முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் தெருவிளக்குகள் அணைந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள பல கடைகள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வாகனங்கள் எரிந்து நாசமாகின. குண்டுவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. கார் வெடித்து சிதறியதை கண்ட மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
வெடிகுண்டு நிகழ்வை அடுத்து டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தேசிய தலைநகரம் முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களைக் கொண்ட ஒரு பெரிய பயங்கரவாத தொகுதி முறியடிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடந்த சம்பவத்திற்கு நாசவேலை காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் காலையில் 2,900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் சிக்கிய நிலையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.


