மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு!

 
மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு!


மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மாதம் 3-ந் தேதி மோதல் ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறி, பின்னர் கலவரமாக வெடித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்துக்கொண்டிருக்கிறது.  பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 50 ஆயிரம் பேர் வரை அங்குள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கலவரத்தை கட்டுப்படுத்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக  கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் 16 நாட்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு!

அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் 4 நாட்களில் மணிப்பூரில் தங்கி சமதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து தீ வைப்பு உள்ளிட்ட  வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.  மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க,  கடந்த மாதம் 3-ந் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.  இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், கடைசியாக  ஜூலை 5 ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கலவரம் இன்னும் முடிவுக்கு வராததால் இணைய சேவை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 10ம் தேதி வரை அங்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.