பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம் - இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி

 
vikram vikram

இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகஇந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். 

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் தொடர்பாகவும், இந்தியாவின் பதிலடி தொடர்பாகவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் மே-10 அன்று ஜம்முவில் உள்ள ஷம்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தனது விரோதப் போக்கை தொடர்ந்தது. இரவு முழுவதும் பல ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் அனுப்பி, ஆபத்தை விளைவித்தது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனை, பள்ளிகளை குறிவைத்து பாக். தாக்குதல் நடத்தியது. 

இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு மக்களே தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். சீர்சா விமானப்படை தளம் தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது. S-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவலும் தவறானது என கூறினார்.