நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு!

 
tn

நாடாளுமன்ற மக்களவைக்குள்  இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளது பாதுகாப்பு அம்சங்களை மிகப்பெரிய கேள்விக்குள்ளாகியுள்ளது.

Parliament
நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.



முன்னதாக கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் 9 பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் 14 பேர் வீர மரணம் அடைந்தனர். பழைய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளான இன்று  இச்சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.