பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்..

 
பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்..

700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்.

பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்.பியுமான  இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில், பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட்.  இவர் தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்..

கேராளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின்  முன்னாள் எம்.பியாக இருந்தவர்.  நடிகர், பாடகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட இன்னசென்ட்,  மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார்.  இவர் கடந்த 2012ம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.  அதன்பிறகு புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அது தொடர்பான புத்தக்ம் ஒன்றையும்  வெளியிட்டார்.

  இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக  மார்ச் 3ம் தேதி முதல் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  நேற்று இரவு அவர் காலமானார்.  இவரது மறைவிற்கு பல்வேறு திரைபிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .