போபால்-டெல்லி வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து - பயணிகள் ஓட்டம்

 
train train

போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று அதிகாலையில் போபாலில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற வந்த பாரத் ரயில் இன்று காலை எட்டரை மணி அளவில் குர்வாய் கெதோரா பகுதியில் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென அந்த ரயிலின் கடைசி பெட்டியில் தீப்பற்றியது. இதனை சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயில் அந்த இடத்திலேயே நிறுத்திய நிலையில், ரயிலில் தீ எரிவதை பார்த்த பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். 

தீ விபத்து குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக அனைத்தனர். ரயில் பெட்டியின் அடியில் இருந்து பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது. வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.