பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி

 
BJP

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். 

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் (195 பேர்) பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். 

வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 50 வயதுக்குட்பட்டோர் 47 பேர் போட்டியிடுகின்றனர்.  பெண் வேட்பாளர்கள் 28 பேர் போட்டியிடுகின்றனர். 27 SC, 18 ST மற்றும் 57 OBC வேட்பாளர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் 2 பேர் போட்டியிடுகின்றனர்.