மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 6 பயணிகள் உயிரிழப்பு..!!

 
Five lives lost in Mumbai train tragedy. Five lives lost in Mumbai train tragedy.

மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவில்  மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக  பயணிக்கள் தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளனர். இதில் 6 பயணிகள் உயிரிழந்த நிலையில் , மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். காலை நேரம் என்பதால் கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என ஏராளாமானோர் புறநகர் மின்சார ரயிலில் பயணித்துள்ளனர்.  ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

Five lives lost in Mumbai train tragedy.

அப்போது எதிர்பாராத விதமாக பயணிகள் பலர் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் பலியான சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.