ஜி20 உச்சி மாநாடு- தீர்மானத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

 
mOdi

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  ஜி20 மாநாட்டில் பெண்களின் முன்னேற்றம், உக்ரைன் போர் நிறுத்தம், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது உட்பட 83 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.

modi

இது தொடர்பாக ஜி20 தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகளை எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவது, பாலின இடைவெளியை குறைத்து, சமமான வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவது, சர்வதேச நிதி அமைப்புகளைச் சீரமைப்பது, உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது,  தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, பண மோசடிகளை தடுப்பது, இரண்டு தூண்கள் கொண்ட சர்வதேச வரித்தொகைப்பை அமல்படுத்துவது, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் நல்ல முறைக்கு பயன்படுத்துவது, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் கொண்டுவருவது, பேரிடர் அபாயத்தை குறைக்க அதற்கு தகுந்தார் போல உட்கட்டமைப்புகளை உருவாக்குவது, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பது" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • ஜி20 உச்சி மாநாட்டின் இறுதித் தீர்மானத்தில் உறுப்பு நாடுகளிடையே உக்ரைன் குறித்த கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடுகளை ஜி.20 ஒப்புக்கொள்கிறது. 
  • ஜி20 அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்தல்களையோ உறுதியாக எதிர்க்கிறது. 
  • உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  • போர் சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. 

Image

  • பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை உட்பட சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் வலியுறுத்தப்பட்டது. 
  • வரவிருக்கும் ஜி20 உச்சி மாநாடுகள் பிரேசில் (2024), தென்னாப்பிரிக்கா (2025), அமெரிக்கா(202026) நடைபெற உள்ளன.