என்னது பாஜக வேட்பாளருக்கு ரூ.1,400 கோடி சொத்து மதிப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்

 
gn

பாஜக சார்பில் தெற்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிட களம் இறங்கியுள்ளவர் பல்லவி டெம்போ.  இவர் இந்து ஜெர்மன் கல்வி மற்றும் கலாச்சார சொசைட்டி தலைவராக இருக்கிறார்.  தொழிலதிபராகவும் கல்வியாளருமாகவும்  வலம் வரும் பல்லவி  டெம்போ புனே எம் ஐ டி உயர்கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்.

tn

 அத்துடன் டெம்போ நிறுவனங்களின் செயல் இயக்குனராகவும் இவர் பதவி வகிக்கிறார் . கோவா மக்களவை  தொகுதியில் இதுவரை பெண்கள் யாரும் போட்டியிடாத நிலையில் தற்போது கோவாவில் போட்டியிடும் முதல் மக்களவைப் பெண் வேட்பாளர் இன்று பெருமையை பல்லவி பெற்றுள்ளார். 

tn

பல்லவி டெம்போ கடந்த 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார் . அதில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.  பல்லவி டெம்போவின் அசையும் சொத்து மதிப்பு சுமார் 255.4 கோடி என்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு ரூபாய் 994.8 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . அத்துடன் பல்லவியின் பெயரில் சுமார் 28.2 கோடி அளவிலான அசையா சொத்து உள்ளது . லண்டனில் இவருக்கு சொந்தமாக அப்பார்ட்மெண்ட் இருக்கிறதாம். இதன் மதிப்பு 10 கோடியாம் .  அதுமட்டுமின்றி 5.7 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் இருக்கின்றனவாம்.