நாட்டுக்காக சிறைக்கு செல்வது சாபம் அல்ல.. பெருமைக்குரிய விஷயம் - அரவிந்த் கெஜ்ரிவால்..

 
நாட்டுக்காக சிறைக்கு செல்வது சாபம் அல்ல.. பெருமைக்குரிய விஷயம் - அரவிந்த் கெஜ்ரிவால்..

நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் சிறைக்கு செல்வது பெருமைக்குரிய விஷயம் என  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேரிவித்துள்ளார்.

டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் ஆம் ஆத்மி அரசு வழங்கியது குற்றச்சாட்டாகும்.  இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள  சிபிஐ, இதில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சந்தேகிக்கிறது.  இந்த நிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சிசோடியாவுக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு அவர் ஆஜரானார்.

விசாரணைக்கு ஆஜராகும் மணிஷ் சிசோடியா .. டெல்லி சிபிஐ அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு..

இந்நிலையில்  மணிஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியான நிலையில்,  சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்த்திருந்தது.  இதனையடுத்து  அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததாக மற்றொரு வழக்கை சிபிஐ  அண்மையில் பதிவு செய்துள்ளது. டெல்லி அரசால் உருவாக்கப்பட்ட  ஊழல் கண்காணிப்பு குழு மூலம் உளவு வேலைகளை மணிஷ் சிசோடியா செய்தார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது.  இந்த வழக்கிலோ  அல்லது மதுபான கொள்கை வழக்கிலோ அவர் கைதாக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா

இந்நிலையில், மணிஷ் சிசோடியா இன்று காலை தனது இல்லத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக புறப்பட்டார். திறந்த நிலையிலான காரில் நின்றபடி சென்ற அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு  கோஷங்களை எழுப்பியபடி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  இந்த நிலையில்   முதலமைச்சர்  கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “கடவுள் உங்களுடன் இருக்கிறார் மணிஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆசீர்வாதங்கள் உங்களுடன் உள்ளன. நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய ஒரு விசயம். நீங்கள் சிறையில் இருந்து விரைவில் திரும்ப வேண்டும் என கடவுளிடன் நான் வேண்டிக் கொள்கிறேன். டெல்லியின் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் நாங்கள் எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.  உங்கள் குடும்பத்தினரை நாங்கள் பார்த்து கொள்வோம். கவலைப்பட வேண்டாம் சிசோடியா அவர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.