சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் சந்தாகலா பாலத்தில் இன்று காலை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது.இந்தநிலையில் தடம் புரண்ட இடத்தில் இருந்து சரக்கு பெட்டிகளை அகற்றி தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் பயணிகள் தங்கள் பயண விவரங்களை அறிய ரயில்வே உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் விஜயநகரம் முதல் விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் முதல் பலாசா, பலாசா முதல் விசாகப்பட்டினம் வரை செல்லும் ரயில்கள், விசாகப்பட்டினம் - கோராபுட் மற்றும் கோராபுட் - விசாகப்பட்டினம் வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நடக்கும் போது மற்றொரு தண்டவாளத்தில் வேறு எந்த ரயில்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித காயமும் உயிர்சேதமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


