#Breaking குஜராத், இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

 
election commision

குஜராத் மாடல் வளர்ச்சி என்ற பெயரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தற்போது மத்தியில் ஆட்சி அமைத்து கொண்டிருப்பவர் நரேந்திர மோடி. கட்சியிலும் ,ஆட்சியிலும் உச்ச அதிகாரம் படைத்த மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். பாஜகவின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதில் இவர்கள் இருவரும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில் குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸின் செல்வாக்கு தற்போது சரிய  தொடங்கிவிட்டது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு பலமாக இல்லாத சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரவால் பாஜகவின் குஜராத் கோட்டையை தகர்க்க வேண்டும் என்று நோக்கத்தில் களமிறங்கியுள்ளார். 

Modi - NITI Aayog

 இந்நிலையில் குஜராத் , இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது . டிசம்பருக்குள் இரு மாநில தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் இன்று தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

election

குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ் வெற்றி தடுக்கப்பட்டு பாஜக வெல்லும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.