இனி 21 வயது ஆனாலே மது குடிக்கலாம் : அரசின் அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சி..

 
நட்சத்திர விடுதியில் கைதியுடன் மது விருந்து… சிறைவார்டன் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்!

பல பெண்களின் தாலியை பறிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.. மது அருந்துவதால் உடல் நலத்திற்கு கேடு என்று எத்தணை பிரச்சாரங்கள் செய்தாலும் அதனை மதுப்பிரியர்கள் கேட்பதாக இல்லை. இது ஒருபுறமிருக்க  நாட்டில் நடக்கும் 80 சதவீத குற்றங்களுக்கு மது அருந்துவதே முக்கிய காரணம் என்று கூடப்படுகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார்  16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டிருக்கிரார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.   இதில் பெண்கள் மட்டும் 7.5% .

‘தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை’..தீபாவளி, நியூ இயருக்கு கூட இவ்வளோ விற்பனையாகாதாம்!

மேலும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் மது அருந்துவதாக கூறப்படுகிறது. அதிலும் இளைஞர்கள் அதிகளவு மதுவுக்கு அடிமையாகி வருவது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம்..  கட்டுப்பாடுகள் இருந்தாலே  இளைஞர்கள் அதனை பின்பற்ற மாட்டார்கள். இந்த நிலையில்  மது அருந்துவதற்கான உச்ச வரம்பை 25 வயதில் இருந்து 21 வயதாக குறைத்து  ஹரியானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்... இந்த மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை - திடீர் உத்தரவு!

நேற்று கூடிய ஹரியானா சட்டமன்றத்தில் மது அருந்துவதற்கான வயதை குறைத்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, மதுவை உற்பத்தி செய்தல், மொத்த மற்றும் சில்லறை விற்பனை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான உரிமமும் 21 வயதுடையவர்களுக்கு வழங்கப்படும். இங்கு ஏற்கனவே  25 வயது உடையவர்கள் மட்டுமே மது அருந்த வேண்டும் என்று சட்டம் இருந்ததாம்.  இந்த சட்டம் நடைமுறையில் இருந்ததால் அங்கு 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது அருந்தவில்லையா என்று கேட்டால் அதற்கு அந்த அரசிடம் பதிலில்லை..

ஏற்கனவே, சமீபத்தில்  டெல்லியில்  மது அருந்துவதற்கான வயதை 21 ஆக குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது ஹரியானா அரசும் வயது வரம்பை குறைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.