”அதிகரிக்கும் கொரோனா.. இரவு நேர ஊரடங்கு போடுங்கள்” - மத்திய சுகாதாரத்துறை செயலர் வலியுறுத்தல்..

 
rajesh bhushan


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாள்தோறும் அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வரும் வார்த்தை ’கொரோனா’. அந்த அளவிற்கு ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வந்த கொரோனா பாதிப்பு,  கடந்த சில மாதங்களாக கனிசமாக குறையத் தொடங்கியது.  அப்பாடா..! என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்து களமிறங்கியிருக்கிறது புதியவகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ்.  தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட இந்த தொற்று, மிக வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி விட்டது.

ஒமைக்ரான் கொரோனா

இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா  தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இது ஒருபுறம் இருக்க கடந்த 2 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கனிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  இந்நிலையில்  கொரோனா தொற்று அதிகரித்து வரும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 27 மாவட்டங்களில் கன்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என  மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதரத்துறை அதிகாரிகளுக்கு ராஜேஷ் பூஷன் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதன்படி  கேரளா, மிசோரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, மணிப்பூர், மேற்கு வங்காளம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், அங்கு  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு பூஷன் கேட்டுக் கொண்டார்.

ஊரடங்கு

மேலும் கொரோனா  பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு, மக்கள் அதிகளவு கூடுவதை கட்டுப்படுத்துவது, ,சமூக, அரசியல், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை தடை செய்தல், (பொழுதுபோக்கு, கல்வி, திருவிழாக்கள்),   திருமணங்கள் மற்றும் இறுதிச்  சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான கட்டுபாடுகளை விதிப்பதோடு, வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் பூஷன் கடிதம்