விளையாடும்போது மாரடைப்பு- 25 வயது இளைஞர் உயிரிழப்பு- அதிர்ச்சியூட்டும் வீடியோ

 
விளையாடும்போது மாரடைப்பு- 25 வயது இளைஞர் உயிரிழப்பு விளையாடும்போது மாரடைப்பு- 25 வயது இளைஞர் உயிரிழப்பு

தெலங்கானாவில் ஷட்டில் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.


 

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், டல்லாடா கிராமத்தை சேர்ந்த குண்ட்லா ராகேஷ் (25) ஐதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நாகோல் மைதானத்தில் நண்பர்களுடன் ஷட்டில் விளையாடும்போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு ராகேஷ் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரகேஷ் விளையாடிக்கொண்டு சரிந்து விழுந்து இறந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.