வரலாற்று நினைவுச் சின்னங்களில் பலத்த பாதுகாப்பு!

 
india india

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில்,  இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா கேட், ஜமா மசூதி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.