காற்றில் கவிழ்ந்த 100 அடி உயர தேர்- இருவர் பலி
கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே தேர் கவிழ்ந்து விபத்து இரண்டு பேர் பலியாகினர்.

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே உஸ்கூர் கிராமத்தில் இன்று மாலை பல நூற்றாண்டுகளைக் கண்ட 150 அடி உயரமான தேர் பலத்த காற்று காரணமாக அடியோடு சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓசூரைச் சேர்ந்த லோகித் என்பவர் உயிரிழந்தார்,மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். ஆனேகல் தாலுகாவில் மதுரம்மா தேவி கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் 150 அடிக்கு மேல் உயரமுள்ள தேர் அலங்கரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான டிராக்டர்களாலும் காளைகளாலும் இழுக்கப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாகும்
இன்று நடைபெற்ற திருவிழாவின்போது பலத்த காற்று மற்றும் மழையால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் ஒசூரை சேர்ந்த இருவர் பலியான நிலையில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தேர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


