பெரும் அதிர்ச்சி! மீன் உணவு சாப்பிட்ட இருவர் பலி

 
s

கேரளாவில் உணவகத்தில் மீன் உணவு சாப்பிட்ட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை. ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

വിഴിഞ്ഞത്ത് മീൻ വിഭവങ്ങൾ കഴിച്ചു, ദേഹാസ്വാസ്ഥ്യം; ഒരേ കുടുംബത്തിലെ  രണ്ടുപേർക്ക് ദാരുണാന്ത്യം, ഹോട്ടൽ പൂട്ടി

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்சத்தில் உள்ள உணவகத்தில் மீன் உணவு சாப்பிட்ட ஷஜி (48), ரஷீதா பீவி (58) ஆகிய இருவர் உணவு நச்சு காரணமாக நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழிஞ்சம் பகுதியில் உள்ள அஸ்மாக் உணவகத்தில் அவர்கள் மீன் முட்டை, கணவாய் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷஜி மற்றும் அவரது உறவினர் ரஷீதா பீவி உயிரிழந்தனர். ஷஜியின் மனைவி சஜிமோள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். சம்பவம் நடந்த விழிஞ்சம் பகுதியில் உள்ள அஸ்மாக் ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். குடும்பத்தினர் மீன் மற்றும் கடல் உணவுகளைச் சாப்பிட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.உணவகத்திற்கு முறையான உரிமம் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பனிக்கட்டிகள் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதுகுறித்து விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உணவு பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement