திருமணமான 3 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்! யூடியூப் பார்த்து கொன்றதாக வாக்குமூலம்
ஆந்திராவில் திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆன மனைவியை யூடியூப் பார்த்து கயிற்றால் கழுத்து நெறித்து கொலை செய்த சிஆர்பிஎப் வீரரின் செயல் அதிர்ச்சியைடுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும், நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெகதீஷ் சிஆர்பிஎப் வீரராக விசாகப்பட்டினத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மனைவி அனுஷா திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பிரசாத்துடன் பழகி வந்ததை அறிந்த ஜெகதீஷ் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில் அனுஷா கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொன்றார். பின்னர் அனுஷா போனில் இருந்து அனுஷாவின் தந்தை, மூத்த சகோதரர், நண்பர் மற்றும் கணவர் ஜெகதீஷ் ஆகியோருக்கு, பிரசாத் தனக்கு போன் செய்து தொல்லை தருவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் மெசேஜ் அனுப்பினார். இதனால் அனுஷா குடும்பத்தினர் பிரசாத்தின் வீட்டை தாக்க சென்றனர். இதனால் பிரசாத் குடும்பத்தினர் டயல் 100க்கு போன் செய்து புகார் அளித்தனர். எஸ்.ஐ மகேஷ் மற்றும் போலீசார் உடனடியாக கிராமத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஜெகதீஷ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாட்டு தொழுவம் அருகே அனுஷாவின் சடலம் கிடந்தது. உடனே போலீசார் பிரசாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அனுஷாவுக்கும் பிரசாத்துக்கும் இடையே ஒரு வருடமாக எந்தவித உரையாடலும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அனுஷா அனுப்பிய மெசேஜ் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு சென்றது எப்படி என விசாரித்தனர். அப்போது கணவரிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில் ஜெகதீஷ் கூறுகையில், “தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், வேறு வழியின்றி அனுஷாவை திருமணம் செய்துவிட்டு வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு சென்று விட்டேன். பிரசாத் குறித்து தெரிந்ததால் அப்போது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரை கொலை செய்ய ஒரு வாரத்திற்கு முன் கிராமத்திற்கு வந்தேன். வந்தவுடன் மனைவியை அழைத்துக்கொண்டு விஜயநகரம் மற்றும் பல இடங்களில் சுற்றினேன். பின்னர் வேலையில் இருந்து அழைப்பு வந்ததாக கூறி அனுஷாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். பின்னர் விசாகப்பட்டினம் சென்று ங்கிருந்து இம்மாதம் 16ம் தேதி இரவு பங்காரம்மாபேட்டை கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்து வெளியே வருமாறு மனைவி அனுஷாவை அழைத்து அவரது நடத்தை குறித்து கேள்வி கேட்டேன். இதனால் மனம் உடைந்த அனுஷா வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி யுடுயூப்பில் தடயம் இல்லாமல் கொலை செய்வது எப்படி என பார்த்து அதற்கேற்ப நைலான் கயிற்றை அனுஷா கழுத்தில் இறுக்கி மூச்சு விடமுடியாமல் கொன்றேன். அதன் பின்னர் ஏற்கனவே தன் செல்போனில் டைப் செய்து வைத்திருந்த மெசேஜை அனுஷா போனில் காப்பி பேஸ்ட் செய்து ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு அனுப்பினேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


