‘நான் நிரபராதி.. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்’ - WFI தலைவர் பிரிட்ஜ் பூஷன் ..

 
 ‘நான் நிரபராதி.. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்’ - WFI தலைவர் பிரிட்ஜ் பூஷன் ..

தான் நிரபராதி என்றும், விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும்  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த பயிற்சி பெறும் மைனர் வீராங்கனைகளை,  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.  அவரை கைது செய்ய வலியுறுத்தி, இரண்டாவது முறையாக மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 6 நாட்களாக  வீரர் வீராங்கனைகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலை தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன்  மீது டெல்லி போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

 ‘நான் நிரபராதி.. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயார்’ - WFI தலைவர் பிரிட்ஜ் பூஷன் ..
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் , “நான் நிரபராதி, எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நான் மதிக்கிறேன். எனக்கு நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது.

நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் நான் குற்றவாளி இல்லையே. இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் (மல்யுத்த வீராங்கனைகளின்) குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும். கிட்டத்தட்ட என்னுடைய பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அரசாங்கம் 3 நபர்கள் குழுவை அமைத்திருக்கிறது. இன்னும் 45 நாட்களில் தலைவருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்ததும் என்னுடைய பதவிகாலம் முடிந்து விடும்” என்று தெரிவித்தார்.