4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
heavy rain

உத்தரகாண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் மிக அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.   வளிமண்டல மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் இதுவரை சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளனர். இதேபோல் பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Rain

இந்நிலையில், உத்தரகாண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் அந்த 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதேபோல் உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மராட்டிய மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரக்ண்ட் மாநிலத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.