குஜராத்தில் காங்கிரஸ் 24, ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டி

 
tt

மக்களவை தேர்தல் கூட்டணியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

congress

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை முறியடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.  இருப்பினும் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரசுக்கு வெறும் 2 இடங்களை மட்டுமே ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வர, இதனைக் காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகளில் காங்கிரஸ் 24, ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டியிடுகிறது. 
ஆம் ஆத்மி பாரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி இடங்களில் இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

aravind

வடகிழக்கு, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. சண்டிகரில் உள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.