புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது - பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

 
PM Modi

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கிய நிலையில், முன்னதாக பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில், முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  அமைக்கப்பட்டுள்ள  புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி,  மக்களவை சபாநாயகருடன்  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது.  அதேபோல் கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட  அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.  அப்போது செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஆசி பெற்றார். அதன்பிறகு,  சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி.  

இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தொடங்கியது. தேசிய கீதத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தொடங்கியது. முன்னதாக விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதலைமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.