கோடிக்கணக்கில் வருமானம்.. பிரபல யூடியூபர்களில் வீடுகளில் ஐடி ரெய்டு..

 
RAID TTN

கேரளா முழுவதும் பிரபல யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்து வரும் இணைய மோகம் காரணமாக, யூடியூப் சேனக்ளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திரை பிரபலங்களை கொண்டாடிய காலம் போய், youtube பிரபலங்கள் கொண்டாடப்படும் காலம் வந்துவிட்டது. அதுவும் கொரோனா காலத்தில் வேலையில்லாமல் வீட்டில் இருந்த பலரும், வீட்டுக்கு வீடு யூடியூப் சேனல் என ஏராளமான youtube சேனல்கள்  தொடங்கப்பட்டுவிட்டன.  

youtube

அதிலும் திரைப்பிரபலங்களும்  தங்கள் பங்கிற்கு யூடியூப் சேனல் தொடங்கி வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.  யுடியூபர்கள்  பதிவிடும் வீடியோக்கள், பதிவுகளுக்கு எந்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். மேலும் தனி விளம்பரம், விழாக்களுக்கு செல்லும்போது வருமானம் என யூடியூபர்கள் வெவ்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுகிறார்கள். ஆனால் கிடைக்கும்  வருமானத்தை சரிவர கணக்கில் காட்டாமல்  இருப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கோடிக்கணக்கில் வருமானம்.. பிரபல யூடியூபர்களில் வீடுகளில் ஐடி ரெய்டு..

கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நடிகை பியர்ல் மானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட யுடியூபர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பலர் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவதாகவும், அதில் சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் இருப்பதாகவும்  புகார் வந்துள்ளது.  இதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.