‘இந்தியா' கூட்டணி - ஆலோசனைக் கூட்டம்!!

 
tn

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

INDIA

இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் கடந்த 1ஆம் தேதி  தொடங்கியது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்தியா கூட்டணி 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது.அதேபோல் 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது. 

INDIA

இந்நிலையில்  ‘இந்தியா’ கூட்டணி பிரச்சாரக் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு டெல்லி, பாட்னா, சென்னை, நாக்பூர், குவாஹட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.