நம்பிக்கையில்லா தீர்மானம் - இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆலோசனை

 
INDIA

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மாலை விளக்கம் அளிக்கவுள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 10 நாட்களுக்கு மேலாக இரு அவைகளும் முடங்கின. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிக்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் கடந்த 08ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது காங்கிரஸ் எம்.பிக்கள் கௌரவ் கோகோய், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கார சார விவாதத்தை முன்வைத்தனர். மீதான காரசாரமான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று  பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கிறார். இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, 
பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது குறிப்பிடதக்கது.