கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா

 
rg

கனடா தூதரக அதிகாரியை  இந்தியா வெளியேற்றியது. 

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வரும் நிலையில்,  கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டனர்.  கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த மார்ச் மாதம் இவர்கள் போராட்டம் நடத்தினர்.  காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தியது.  

கனடாவில் காலிஸ்தான் டைகர் படை பிரிவின் தலைவரும் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரன்டோவில் உள்ள துணைத்தூதர் அபூர்வா வஸ்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றினர் என்று அவர்களின் புகைப்படங்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர் . இதையடுத்து இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்திக் சிங் நிஜார் தொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்ப தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கனடா பிரதமர் கூறியிருந்தார். இதன் காரணமாக இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றி உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

tn

இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா. காலிஸ்தான் நிஜ்ஜார் மரணத்தில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிய சில மணிநேரங்களிலேயே இந்தியாவின் தூதரக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.