மீண்டும் அதிர்ச்சி! ட்ரோன் அட்டாக்கை தொடங்கிய இந்தியா! பதறும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே டிரோன் மூலம் நடத்திய தாக்குதலில் கடைகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே டிரோன் மூலம் நடத்திய தாக்குதலில் கடைகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. ராவல்பிண்டியில் இன்று இரவு பிஎஸ்எல் தொடரில் கராச்சி- பெஷாவர் அணிகள் மோத இருந்த நிலையில் மைதானம் அருகே மோதல் வெடித்தது. ஹரோப் ரக டிரோன் மூலம் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர்"-ன் இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவு படுத்தி இருந்தோம், இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது எனக் கூறியுள்ள இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இத்தாக்குதலுக்கு பதற்றம் அதிகாரிக்காத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம அளித்துள்ளது.


