ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா-இன்று ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

 
Covid

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முன் தினம் 7 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8,175 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.