மக்கள் நிம்மதி! இந்தியாவில் கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்!

 
Covid

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மற்றொரு கொரோனா அலை வந்துவிட்டதா என அச்சத்தில் இருந்தனர். குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அந்தந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று, 4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நேற்று 17 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு என்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,379- பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது.