இந்தியாவில் ஒரே நாளில் 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
Covid

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில்  4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் 3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று கொரோனா பரவல் சற்று அதிகரித்தது. நேற்று 3,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  
இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,56,716-லிருந்து 4,49,60,678 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 7,873 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,92,828 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 40,177-லிருந்து 36,244 ஆக குறைந்துள்ளது.